Mohammed Shami: நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சர்வதேச கிரிக்கெட் விளையாடும் முகமது ஷமி

ஷமியின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் அலிப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

 

1 /9

முகமது ஷமி இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.  

2 /9

ஷமி மற்றும் அவரது சகோதரர் மீது மனைவி ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.  

3 /9

அந்த வழக்கில் தான் அலிப்பூர் நீதிமன்றம் ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.   

4 /9

முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  

5 /9

இருவரும் பரஸ்பரம் பகிரங்க குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்தனர். ஷமி தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாக அவருடைய மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்தார்.   

6 /9

இதனை மறுத்த முகமது ஷமி, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.   

7 /9

இந்த வழக்கால் முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அவர் கவனச் சிதறல்கள் காரணமாக சிறப்பாக பந்துவீச முடியாமல் திணறினார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார்.   

8 /9

தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.  

9 /9

இந்த நேரத்தில் தான் முகமது ஷமியின் மனைவி தொடர்ந்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. அதேநேரத்தில் வழக்கு இன்னும் தொடர்கிறது. இறுதி விசாரணையின் முடிவில் தான் தீர்ப்பு வெளியாகும்.