Modi 3.0: பாஜகவின் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டம்! இது CLSAவின் கணிப்பு!

Modi 3.0 Predictions Of CLSA: பிரபல பங்குச்சந்தை தரகு நிறுவனமான CLSA, மோடி 3.0 மூலதன செலவினங்கள் தொடர்பான துறைகளில் முதலீடு செய்யும் என்று கணித்துள்ளனர். மூன்றாவது ஆட்சிகாலத்தில் மோடியின் ஆட்சி நன்றாக இருக்கும் என நம்பிக்கையை அவர்களின் ஆய்வு தெரிவித்துள்ளது.  

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, தனித்து பெரும்பான்மையை அடையத் தவறியதை அடுத்து, ஆட்சியில் நீடிக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

1 /8

மோடி 3.0 ஆட்சியின் முதல் 100 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று CLSA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆட்சி தொடங்கியதும், மத்தியிஅ அரசாங்கம் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகள் தொடர்பான பெரிய முடிவுகளை எடுக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2 /8

இந்த ஆட்சிக்காலத்திலும் நெடுஞ்சாலை மற்றும் மின் துறைகளிலும் கவனம் செலுத்தப்படும். பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரிய மூலதனச் செலவுகள் மற்றும் மெகா திட்டங்கள் அறிவிக்கப்படலாம். 

3 /8

கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் பணிபுரியும் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்படலாம்.

4 /8

முதல் 100 நாட்களில், 700 கிலோமீட்டர் அதிவேக நடைபாதை, 1700 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் மற்றும் 3000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்படலாம்

5 /8

வந்தே பாரத், விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த ரயிலை கட்டமைக்கும் LT மற்றும் BEML மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்

6 /8

பாதுகாப்பில் உள்நாட்டுமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பெரிய ஆர்டர்கள் வழங்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

7 /8

மின் துறையில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது