Healthy Foods: பொட்டாசியம் அதிகமாக உள்ள பழங்களில் முதன்மையான அவகோடாவை சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் தீரும்? அது ரொம்ப நீளமான லிஸ்ட்
பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழத்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து,பொட்டாசியம், மெக்னீசியம்,மாங்கனிசம் சத்து, பாஸ்பரஸ்,விட்டமின் ஏ,விட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, விட்டமின் இ,விட்டமின் கே போன்ற எண்ணற்ற விட்டமின்களும் மினரல்களும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன.
அழகு சாதன பொருட்களில் அவகோடா பயன்படுத்தப்படுகிறது. விட்டமின் சி,விட்டமின் இ நிறைந்துள்ளதால் சரும வளர்ச்சி, சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. சரும செல்களை புதுப்பிக்கவும் வயது முதிர்வான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
காலை உணவில் அவகோடாவை எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்
பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க அவகோடா மிகவும் சிறந்ததாகும். கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கும் பெண்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கருமுட்டை வளர்ச்சி மேம்படும்
அவகேடோ பழம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு அவகோடாவை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும். தினமும் காலை உணவில் அவகேடோ சாப்பிடலாம்.
கண்பார்வை பலவீனமடைய ஆரம்பித்தால், தினமும் ஒரு அவகோடா பழத்தை சாப்பிடத் தொடங்குங்கள். அவகேடோவில் நிறைந்துள்ள பொட்டாசியம், ஒரு வகை நுண்ணூட்டச்சத்தின் சிறந்த மூலத்தைக் கொண்டுள்ளது
எலும்புகள் பலவீனமாக இருப்பவர்கள், தினம் ஒரு அவகேடோ பழத்தை சாப்பிட வேண்டும். இது எலும்புகள் வலுவாக இருக்கு உதவும். இதில் வைட்டமின் சி இருப்பதால், ஆரோக்கியமான எலும்புகளுக்கு நல்லதாக இருக்கும்
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவகோடாவில் உள்ளன
உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் பண்பு அவகேடோவுக்கு உண்டு. இது மட்டுமின்றி, அவகேடோ நல்ல கொழுப்பின் அளவை அதாவது HDL அளவை அதிகரிக்கிறது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அவகேடோ பழத்தை சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட அவகோடாவை வாரத்திற்கு நான்கு முறையாவது சாப்பிட்டு வந்தால், உடல் அழகு மேம்படும்
உடல் எடையை குறைக்க அவகோடாவை தொடர்ந்து சாப்பிட வேண்டும்