புதன் வக்ர பெயர்ச்சி... அறிவுத் திறனால் வாழ்க்கையில் உச்சத்தை தொட போகும் ராசிகள்!

Mercury Retrograde Transit: நவக்கிரகங்களில் ஞானத்தையும் புத்தியையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய புத பகவான் வக்கிர நிலையை அடைகிறார். மேஷ ராசியில் புதன் வக்கிரம் பயிற்சி அடைவது, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், தன்னம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கும்.

கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது கிரகங்கள் வக்ர நிலையை அடைந்து பெயர்ச்சி ஆவதும், உதயமாவதும் அஸ்தமனம் ஆவதும், அனைத்து ராசிகளையும் பாதிக்கக் கூடியது.

1 /5

புத்தி கூர்மை, நினைவாற்றல், ஆகியவற்றை அளித்தந்து வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும் புதன் பகவான், ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெரும். இந்நிலையில், அறிவுத் திறனால் வாழ்க்கையில் உச்சத்தை தொட போகும் ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /5

சிம்ம ராசிகள், புதனின் வக்கிர பெயர்ச்சியினால், ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து ஆதாயங்களை பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கைகூடும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும்.  

3 /5

தனுசு ராசியினருக்கு புதனின் வக்கிரப் பெயர்ச்சியால், செயல் திறன் மேம்பட்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. இதனால் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் லாபமும் பெருகும்.

4 /5

கும்ப ராசியினருக்கு புதனின் வக்கிரப் பயிற்சி, வெற்றிகளை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க, வேலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு, அதற்கான கால நேரம் கூடி வரும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தடைபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும்.

5 /5

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.