சைவ உணவைப் போலவே அசைவ உணவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. பலருக்கும் சிக்கன் மற்றும் மீன் பிடித்த அசைவ உணவாக உள்ளது.
நம்மில் பலரும் அசைவ உணவை விரும்புபவராக உள்ளனர். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை அசைவம் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது.
ஹோட்டல்களுக்கு சென்றாலும் நல்ல அசைவ உணவு ஹோட்டலாக தேடிப்போய் சாப்பிடுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அசைவ உணவில் நிறைய சத்துக்களும் நிறைந்துள்ளது.
பலரது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக அசைவ உணவு இருக்கும், காரணம் அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சமைத்து சாப்பிடுகின்றனர்.
ஆனாலும் பலர் சனிக்கிழமைகளில் அசைவ உணவை சாப்பிடுவதில்லை, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக சில காரணங்களும் உள்ளது.
சனிக்கிழமைகளில் நிலவின் தாக்கம் பூமியின் மேல் அதிகம் இருக்கும் என்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.