மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கூபே கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால், வாகன சந்தை சூடு பிடித்திருக்கிறது.
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் திங்களன்று இந்தியாவில் தனது புதிய மாடல் 'AMG GLE 63 S 4MATIC+ Coupe' என்ற காரை அறிமுகப்படுத்தியது. காரின் விலை 2.07 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை) ரூபாய் மட்டும் தான்… இந்த ஆடம்பரமான காரின் சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
AMG GLE 63 S 4MATIC+ Coupe மாடலில் 4 லிட்டர் எஞ்சின் உள்ளது, இது 612 ஹெச்பி பவரை அளிக்கிறது என்று நிறுவனம் கூறியது. ஏஎம்ஜி செயல்திறன் வரம்பில் இந்தியாவில் கிடைக்கும் 12 வது மாடல் இது என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மெர்சிடிஸ் இந்திய சந்தையில் வலுவான பிடியைக் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸின் கூற்றுப்படி, இந்த மாடல் 48 வோல்ட் கலப்பின அமைப்பைக் கொண்டுள்ளது, இது 22 ஹெச்பி கூடுதல் சக்தியை அளிக்கிறது. இதனால், கார் வெறும் 3.8 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தில் செல்லும். காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 280 கிமீ ஆகும். மெர்சிடிஸ் கார் வாங்க விரும்பினால், இது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த கார் கேபின் ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், 3-ஸ்டேஜ் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் டைனமிக் ஹேண்ட்லிங் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல, இந்த மாடல் நிறுவனத்தின் மிகச் சிறந்த விருப்பத் தேர்வாக உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் MD & CEO மார்ட்டின் ஷ்வெங்க் இவ்வாறு கூறுகிறார்: "AMG போர்ட்ஃபோலியோ எங்களது வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக தொடர்கிறது மற்றும் 'AMG GLE 63 S 4MATIC+ Coupe' அறிமுகம் ஆடம்பர செயல்திறன் பிரிவில் எங்கள் வலுவான இருப்பை மேலும் வலுப்படுத்தும்."