Mars Retrograde Transit: செவ்வாய் கிரகம், தைரியம் வீரம் விடாமுயற்சி போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாத செவ்வாயின் வக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
செவ்வாய் வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு தொடங்கும் முன்னதாக, செவ்வாயில் ஏற்படும் கிரகநிலை மாற்றம், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகுந்த மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் வர இருக்கும் 2025 புத்தாண்டு சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
புத்தாண்டு பலன்கள்: 2025 புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் நேற்று அதாவது டிசம்பர் ஏழாம் தேதி கடக ராசியில் ஏற்பட்டுள்ள செவ்வாய் வக்ர பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
செவ்வாயின் வக்ர பெயர்ச்சி: ஒரு கிரகம் வக்கிரநிலையை அடையும் போது, அதன் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், அதனால் கிடைக்கும் கெடு பலன்கள், நற்பலன்கள் இரண்டுமே அபரிவிதமாக இருக்கும். இந்நிலையில், செவ்வாயின் வக்ர நிலையால், புத்தாண்டில், அதிர்ஷ்ட பழன்களை அல்ல போகும் சில ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
கடக ராசி: செவ்வாய் கிரகம் வக்கிர பயிற்சி அடைந்துள்ளதால், கடக ராசியினர் நற்பயன்களை சிறப்பாக பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். வேலையில் திருப்தியும், கடின உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கும். எனினும் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் அனுமனை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.
துலாம் ராசி: செவ்வாயின் வக்ர நிலை துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்து, காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும். பிராமணர்களுக்கு செம்பு பாத்திரங்கள் தானமாக கொடுப்பது பலன் கொடுக்கும்.
விருச்சிக ராசி: புத்தாண்டின் தொடக்கம் விருச்சிக ராசியினருக்கு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் எண்ணம் வரும். அதனால் கிடைக்கும் பலன்களும் சிறப்பாக இருக்கும். வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ளலாம். இதனால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண ஆதாயமும் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் அனுமன் சாலிசா பாராயணம் செய்யலாம்.
மகர ராசி: செவ்வாயின் வக்கிரப் பெயர்ச்சி காரணமாக மகர ராசியினருக்கு புத்தாண்டு சிறப்பாக அமையும். இதனால் வரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் தீரும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நிதிநிலைமை மேம்படும். ஏழைகளுக்கு சிவப்பு பயறு கோதுமை ஆகியவற்றை தானம் செய்யலாம்.
மீன ராசி: செவ்வாயின் வக்கிரப் பெயர்ச்சி காரணமாக புத்தாண்டில் மீன ராசியினர், இதுவரை எடுத்த முயற்சிகளுக்கான பலன்களை சிறப்பாக பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்வீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.