Fahadh Faasil : புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் சம்பளம்! 1 நாளைக்கு இவ்வளவா?

Actor Fahadh Faasil Salary For Pushpa 2 : மலையாளம் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக விளங்குகிறார் பகத் பாசில். இவர் புஷ்பா 2 படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actor Fahadh Faasil Salary For Pushpa 2 : மலையாள நடிகரான பகத் பாசிலுக்கு, கேரளாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். கண்களாலேயே எதிரில் இருப்பவரை தனது நடிப்பு திறமையால் அசர வைப்பவர் பகத் பாசில். தமிழில், வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமான இவர் அதற்கடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துவிட்டார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா 2 : தி ரூல் படத்திலும் வில்லனாக வருகிறார். இவருக்கு இப்படத்தில் கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1 /8

பகத் பாசிலை, நாம் அனைவரும் அறிந்து கொண்டது நடிகை நஸ்ரியாவின் மூலமாகத்தான். தமிழில் பிரபல கதாநாயகியாக வளர்ந்து வந்த இவர், பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் அனைவரும் அதிர்ந்து போயினர். 

2 /8

வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான இவர் தொடர்ந்து வில்லனாக நடிக்க வந்த அனைத்து பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் இடம்பெற்றிருந்த இவரது ரத்னவேலு கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. 

3 /8

மாமன்னன் படத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் தமிழில் இவர் நடித்த விக்ரம் படத்திற்கும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

4 /8

இவரை, பலர் நடிப்பின் அரக்கன் என குறிப்பிடுவதுண்டு. காரணம், கண்களாலேயே கடும் கோபத்தையும், வில்லத்தனத்தையும் காட்டுபவர் இவர். 

5 /8

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள டிரான்ஸ், அதிரன், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. 

6 /8

பகத், தற்போது லோக்‌ஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

7 /8

பகத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், அவர் நடித்திருந்த ரங்கன் கதாப்பாத்திரம் படு பிரபலம் ஆகிவிட்டது.

8 /8

பகத் பாசில், புஷ்பா 2 : தி ரூல் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில், இவருக்கு நாள் கணக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க, இவர் ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் வரை வாங்குகிறாராம். இதுவரை, நடிகர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட சம்பளங்களில் அதிக தொகையே ரூ.5 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.