உடல் சூடாக இருந்தால், ஆரோக்கிய குறைவு ஏற்படும். ஆனால், உடலின் வெப்பம் திடீரென குறைவதால் உடல்நிலை சரியில்லாமல் போகும். அது, மூளை பக்கவாதம் மற்றும் பல தீவிர நோய்களை ஏற்படுத்தும். எனவே, இயல்பாக உடல் சூட்டை தணிக்கும் பானங்களான இவற்றை பருகி பயனடையவும்
மோரோ இல்லை தயிரோ, இரண்டுமே உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுப்பவை. இந்த இரண்டையும் தின்சரி குடித்துவந்தால், உடலின் உஷ்ணம் இயல்பாக குறையும்
வெள்ளரியை காயாக அப்படியே சாப்பிட்டாலும் சரி, சாலடாக சாப்பிட்ட்டாலும் சரி, அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸாக குடித்தாலும் சரி, அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். வெள்ளரியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும், இது திசுக்கள் மற்றும் செல்களை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது, இதனால் உடல் வெப்பம் தானாகவே இயல்பாக குறைகிறது
வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி, வெப்ப தாக்கத்தில் இருந்தும் உடலை பாதுகாக்கிறது. சூப்பர்ஃபுட்டான வெங்காயத்தில், சிறிய வெங்காயம் அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும். பல்வேறு கோடைகால நோய்களிலிருந்து பாதுகாக்கும். வெங்காயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக மாறும்
குல்கந்த் ஷேக் குடித்ததுண்டா? இல்லையெனில் குடிக்கத் தொடங்குங்கள். வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும் குல்கந்து, வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும். ரோஜாவில் உடலில் உள்ள அழற்சியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. பாலில் குல்கந்தை கலந்து மிக்சியில் அடித்து, அதை குடிக்கலாம்.
கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல, என்றும் எப்போதும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை பயப்பது இளநீர். இளநீர், உடல் உஷ்ணத்தை இயல்பாக குறைக்கும்