தியேட்டரில் கெத்து.. ஓடிடியிலும் மகுடம்.. உலகளவில் ராஜாவான விஜய் சேதுபதியின் மகாராஜா

விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் கிடைத்த உயர் வரவேற்புக்கு அதிகமாக தற்போது ஓடிடியில் கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் ஓடிடியில் வெளியாகி இரண்டு நாட்களிலேயே 3.2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. இது இவரது 50வது திரைப்படமாகும்.

1 /8

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மகாராஜா படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.  

2 /8

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கிய படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இதில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   

3 /8

நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.  

4 /8

உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 4வது ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.  

5 /8

இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் மகாராஜா படத்தை கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியிட்டது.   

6 /8

மகாராஜா படம் முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இரண்டு நாட்களிலேயே 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.  

7 /8

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மகாராஜா படம் தொடர்ந்து இந்தியாவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதே போல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.   

8 /8

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் மற்றும் பொது ரசிகர்களுக்கும் திருப்திகரமான படமாக இந்த மகாராஜா மாறி இருக்கிறது. குறிப்பாக வடஇந்தியா முதல் வெளிநாடு மக்கள் வரை வரவேற்பை பெறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.