நான்கு கால பூஜையை ஏற்றுக் கொள்ளும் முக்கண்ணன் சிவனுக்கு மஹா சிவராத்திரி

Maha Shivratri Trios: மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த 4 கால பூஜைகள் நடைபெறும்.  

சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்!

1 /8

மஹாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்

2 /8

அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்கள் தண்ணீரையும், வில்வ இலையையும் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 

3 /8

வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.

4 /8

சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும்.   

5 /8

சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜையில் இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும்

6 /8

நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மூன்றாம் ஜாம பூஜை நடைபெறும்

7 /8

3 மணி முதல் அதிகாலை 6 மணி வரையான, மூன்று மணி நேரத்தில் நான்காம் ஜாம பூஜை நடைபெறும்

8 /8

நான்காம் ஜாமத்தில் மஹாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.