தபால் நிலையம் வழங்கும் சேவைக்கு சில கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் துறையால் வசூலிக்கப்படும் 7 முக்கியமான கட்டணங்கள் குறித்து அறிய இதை தொடர்ந்து படிக்கவும்.
உங்களுக்கு தபால் நிலைய கணக்கின் பாஸ்புக் நகல் வேண்டுமென்றால், அதற்கு கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும்.
தபால் நிலைய கணக்கின் ஸ்டேட்மெண்டை பார்க்க, ஒவ்வொரு முறையும் தலா ரூ. 20 ரூபாய் வசூலிக்கப்படும்.
தபால் நிலைய கணக்கின் பாஸ்புக் தொலைந்து போனாலோ அல்லது சிதைந்தாலோ, அதற்கு பதிலாக பாஸ்புக் வழங்குவதற்கு பதிவு ஒன்றிற்கு ரூ.10 செலுத்த வேண்டும்.
தபால் அலுவலகம், கணக்கின் நியமன மாற்றம் அல்லது ரத்து கட்டணமாக (Cancellation Charge) 50 ரூபாயை வசூலிக்கிறது.
கணக்கை மாற்றுவதற்கு தபால் துறை 100 ரூபாய் வசூலிக்கிறது.
தபால் அலுவலகம் ஒரு காலண்டர் ஆண்டில் 10 செக்குகள் வரை கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு, ஒரு காசோலைக்கு ரூ. 2 வசூலிக்கப்படும்.
காசோலைகளை மதிப்பிழக்கச் செய்தால், இந்திய தபால் துறை 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கும்.