சூரியனின் அருளால் அடுத்த வாரம் முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காலம்!!

Sun Transit: பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. 

1 /4

3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும். 

2 /4

கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமான காலகட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சிம்ம ராசியில் இருந்து சூரிய பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் இரண்டிலும் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வீடு பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது.   

3 /4

இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் பணி நடை சிறப்பாக இருக்கும். இது சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அதில் இப்போது வெற்றி கிடைக்கும். 

4 /4

கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ஆம் வீட்டில் நடப்பதால், இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது திடீர் பண ஆதாயத்தையும் நாம் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் நன்றாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)