சிவனை வழிபட வாழ்வில் சௌபாக்கியங்கள் கிடைக்கும்

திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள் சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள், மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பெரும்பாலானோர் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர். 

1 /5

சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி, வெற்றியை தேடித் தரும். 

2 /5

திங்கட்கிழமைகளில் சிவ சாலிசா அல்லது சிவ மந்திரத்தை ஜபிக்கவும். ருத்ராஷ்டகம், சிவ மஹிம்னா ஸ்தோத்திரம், சிவதாண்டவ ஸ்தோத்திரம் போன்றவற்றையும் பாராயணம் செய்யலாம். இதன் மூலம் சிவனின் அருளைப் பெறலாம்.

3 /5

பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமைகளில்,  சிவனை வழிபடுவதால் சிவனுடன் விநாயகரின் அருளும் கிட்டும்.

4 /5

நீண்ட காலமாக நிறைவேறாத மன விருப்பங்கள் நிறைவேற, திங்கட்கிழமை  அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

5 /5

திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் செல்வமும் வளமும் பெருகும்.