மரண பயம் போக்கும் காலாஷ்டமி! கால பைரவருக்கு உரிய 12 அஷ்டமிகள்!

Lord Kaal Bhairav Ashtami: சிவபெருமானின் ஒரு வடிவமான பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி தினம். இது தேய்பிறை அஷ்டமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது. காலபைரவரின் வாகனம் நாய்...

2 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்ட ஸ்ரீ பைரவர் வழிபாடு இந்து மதத்தில் முக்கியமானது. ஏனென்றால், பைரவர் தான், நவக்கிரகங்களுக்கு பிராண தேவதை. அதிலும், சனீஸ்வரருக்கு வரம் தந்து, அவரது கடமையை தவறாமல் செய்ய வைக்கும் காலபைரவரே, சனியின் குரு ஆவார்.  

1 /13

சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ பைரவர், நாகத்தை பூணூலாக கொண்டவர். சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவர். கால பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி மிகவும் விஷேசமானது. ஒவ்வொரு மாத அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்

2 /13

சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஸ்நாதனாஷ்டமி என்று பெயர்

3 /13

சதாசிவாஷ்டமி என்று அழைக்கப்படும் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளை அனுசரிக்கப்படுகிறது

4 /13

பகவதாஷ்டமி என்று ஆனி மாத தேய்பிறை அஷ்டமிக்குப் பெயர்

5 /13

நீலகண்டாஷ்டமி என்பது ஆடி மாத தேய்பிறை அஷ்டமியின் பெயர்  

6 /13

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமிக்கு ஸ்தாணு அஷ்டமி என்று பெயர்

7 /13

சம்புகாஅஷ்டமி என்று புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி அழைக்கப்படுகிறது

8 /13

ஐப்பசி மாத அஷ்டமிக்கு ஈசான சிவாஷ்டமி என்று பெயர்

9 /13

கால பைரவாஷ்டமி, அனைத்து தேய்பிறை அஷ்டமிகளிலும் விசேஷமானது, இது கார்த்திகை மாதம் அனுசரிக்கப்படும்

10 /13

சங்கராஷ்டமி என்பது மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி

11 /13

தேவதாஷ்டமி என்பது தை மாதத்தில் அனுசரிக்கப்படும் அஷ்டமி தினம் ஆகும்

12 /13

மகேஸ்வராஷ்டமி என்பது மாசி மாத அஷ்டமி  

13 /13

பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது