Truecaller செயலியில் புதிய அம்சம் அறிமுகமாகியிருக்கிறது. AI உதவியுடன் உங்கள் சொந்த குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) மிகவும் பிரபலமாக உள்ளது. இப்போது ட்ரூகாலர் செயலி AI உதவியாளரின் உதவியுடன் தங்கள் சொந்த குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்த புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வசதி பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் பயனர்கள் தங்கள் விருப்பப்படி தயார் செய்த பதில்களை அழைப்புகளுக்கு கொடுக்கலாம்.
அதாவது மொபைல் எடுக்க முடியாத தருணத்தில் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு ரெடிமேட் பதில்களை உங்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவே கொடுத்துவிடும். இதனால் உங்களின் பிஸியான சூழலை அழைப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.
இதற்காக மைக்ரோசாப்டுடன் ட்ரூ காலர் கைகோர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உங்கள் குரலை செயற்கையாக உருவாக்கும் அம்சமும் இருக்கிறது. முறையாக கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின்னரே தற்போது இந்த தொழில்நுட்பம் கிடைக்கும்.
வரவிருக்கும் சில வாரங்களில், Truecaller இந்த தனிப்பட்ட உதவியாளர் குரல் அம்சத்தை பல நாடுகளுக்கு வர இருக்கிறது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஸ்வீடன் மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.