சமூக ஊடகங்களை கலக்கும் குட்டி பகவந்த் மான்: வைரலாகும் படங்கள்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2022: பஞ்சாபில் 117 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வலுவான இடத்தில் உள்ளது. டெல்லியில் செய்த புரட்சியைப் போல பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் முகமான பகவந்த் மான் போல வேடம் போட்டு வலம் வந்த ஒரு சிறுவனின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த குட்டி பகவந்த் மானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பகவந்த் மான் கெட்டப்பில் தயாராகியிருக்கும் இந்த குழந்தை ஏற்கனவே ஜூனியர் கெஜ்ரிவால் வடிவிலும் வேடம் பூண்டு பட்டையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

1 /5

டெல்லியில் ஆம் ஆத்மி ஆதரவாளர் ஒருவர் தனது மகனுக்கு பகவந்த் மான் போல வேடமிட்டுள்ளார். இந்த சிறிய பகவந்த் மான் மிகவும் அழகாக இருக்கிறார். இப்போது அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

2 /5

முன்னதாக, இந்த குழந்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கெட்டப்பில் தோன்றி அசத்தியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு, இந்த குட்டி கெஜ்ரிவால் மிகவும் பிரபலமானார்.

3 /5

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றதைக் கண்டு ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். டெல்லி முதல் பஞ்சாப் வரை ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், இந்த குழந்தை பகவந்த் மான் வேடமணிந்து அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டு இருக்கிறது.   

4 /5

இதுவரையிலான போக்குகளைப் பார்க்கும்போது, ​​ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராகப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு முன் பஞ்சாபில் சிரோமணி அகாலி தளமும், காங்கிரஸ் கட்சியுமே அரசாங்கங்களை அமைத்துள்ளன. 

5 /5

இன்று காலையில் முதலில், பகவந்த் மான் குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவர் சங்ரூரில் உள்ள குர்சாகர் மஸ்துவானா குருத்வாராவுக்கு சென்றார். பஞ்சாபில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னியும் குருத்வாராவில் பிரார்த்தனை செய்து இன்றைய நாளை தொடங்கினார்.