ஆகஸ்ட் மாதம் வெளியாகும் டாப் ஹீரோக்களின் படங்கள்!

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் பிற மொழி திரைப்படங்கள் சில ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

 

1 /4

1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் 'சீதா ராமன்'.  இப்படத்தில் துல்கர் சல்மான், ம்ருனால் தாகூர் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஆகஸ்ட்-5ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  

2 /4

அமீர் கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படம் 'லாலா சிங் சத்தா'.  ஹாலிவுட் படமான 'பாரஸ்ட் கம்ப்'படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும், இப்படத்தில் நாக சைதன்யாவும்  நடித்துள்ளார், இப்படம் ஆகஸ்ட்-11ம் தேதி வெளியாகிறது.  

3 /4

அக்ஷய் குமார் நடிப்பில் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள 'ரக்ஷா பந்தன்' படம் ஆகஸ்ட்-11ம் தேதி வெளியாகுகிறது.    

4 /4

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'லைகர்'.  இப்படம் ஆகஸ்ட்-25ம் தேதி வெளியாகுகிறது.