புகை பிடிப்பதில் ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள்...

புகைபிடிக்கும் விஷயத்தில் கூட பெண்கள் தற்போது ஆண்களை முந்திவிட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...
  • Dec 21, 2019, 15:40 PM IST

புகைபிடிக்கும் விஷயத்தில் கூட பெண்கள் தற்போது ஆண்களை முந்திவிட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...

1 /6

புகைப்படிக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாகிவிட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடுகையில்., உலகெங்கிலும் உள்ள ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாக தெரிவித்துள்ளது. 

2 /6

புகைபிடித்தல் போன்ற ஒரு கொலைகார வேலையில் இந்த வகை புள்ளிவிவரங்கள் வரலாற்றில் முதல்முறையாக வந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பே குறிப்பிட்டுள்ளது.

3 /6

WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோனோம் கேப்ரியாஸ் கூறுகையில், "புகைபிடிப்பதில் ஆண்கள் அதிகரித்து வருவதை கடந்த தசாப்தங்களாக நாங்கள் கண்டோம். ஆனால் பல்வேறு நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிக்கத் தொடங்குகின்றன என்பதைக் காட்டுகிறது. 

4 /6

இந்தியாவிலும், உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பில் (GATS), புகையிலை மற்றும் புகைபிடித்தல் பிரச்சினையில் பெண்கள் ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறப்படுகிறது.   

5 /6

புகைபிடித்தல் அல்லது புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் தெளிவாகியுள்ளது. இந்த தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக, இதய நோய், மாரடைப்பு மற்றும் பிற தொற்று அல்லாத நோய்கள் ஏற்படுகின்றன. 

6 /6

உலகெங்கிலும் புகைபிடித்தல் மற்றும் பிற புகையிலை பொருட்களின் நுகர்வு காரணமாக சுமார் 8 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் WHO அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, செயலற்ற புகைப்பால் மட்டுமே சுமார் 1.2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.