"அமரன்" பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!

அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.

 

விஜய் தற்போது அரசியலில் பிசியான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். திரைத்துறையில் விஜய் இடத்தை நிரப்பத் தகுதியான நபராக சிவகார்த்திகேயன் வளம் வருகிறார். அமரன் படத்தின் வசூல் வேட்டை ரூ300 கோடியாக அதிகமாகி வசூல் செய்து மாபெரும் சாதனையை முறியடித்தது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை டபுளாக உயர்த்தினார்.

 

1 /8

சிவகார்த்திகேயன் தான் நடிக்கத் தொடங்கிய படங்களில் எல்லாம் குறைவான சம்பளம் பெற்று திறமையை அதிகம் காட்டி வந்தார். இவரது திறமைக்குக் கிடைத்த ஊதியம் ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தார்.   

2 /8

சிவகார்த்திகேயன் காமெடி முதல் காதல் வரை இரண்டிலும் மாசாக நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி பொழுதுபோக்கை இனிமையாக்கினார். 

3 /8

தொகுப்பாளர்,காமெடி நடிகர் மற்றும் கதாநாயகன் என்று பல்வேறு விதத்தில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்தையும் பயன்படுத்தி துணிச்சலான திறமையைக் காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரபல தென்னிந்திய நடிகராவார்.

4 /8

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு ரூ35 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு மடங்காக உயர்த்தியிருக்கிறார்.  

5 /8

70-75 கோடியாக உயர்த்தி தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் sk23 படத்தில் நடித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   

6 /8

சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த சரியான நேரம் இதுதான் என்று இந்த பொன்னான அமரன் வெற்றியைப் பயன்படுத்தி  சம்பளத்தை உயர்த்தினார்.   

7 /8

சிவகார்த்திகேயனுக்கு இந்த வருட வெற்றிப் படமாக “அமரன்”படம் கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு படங்களில் இனி மாஸ் காட்டக் களமிறங்கினார்.  

8 /8

அமரன் படத்தில் இராணுவராக நடித்த சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் கிடைக்காத வெற்றி வாகை இப்படத்திற்குப் பல மடங்கு கிடைத்துள்ளது.