Kushboo-Sundar C Wedding Anniversary Photos: தமிழ் நடிகை குஷ்பூ, தனது கணவர் சுந்தர்.சி உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நாயகிகளுள் ஒருவர் குஷ்பூ. கிட்டத்தட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், 2000ஆம் ஆண்டு சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார்.
கோலிவுட் திரையுலகில் உள்ள, க்யூட் ஜோடிகளுள் குஷ்பு-சுந்தர்.சி முக்கிய இடத்தினை பெற்றுள்ளனர். இயக்குநராக இருந்த சுந்தர்.சி, துணை இயக்குநராக இருந்த போது முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூவை சந்திதார். இவர்கள், 29 வருடங்களாக காதலில் இருப்பதை கொண்டாடியுள்ளனர்.
1995ஆம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தில் சுந்தர்.சி உதவி இயக்குநராக இருந்தார். அந்த படத்தில் குஷ்பூ நாயகியாக நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த இவர்களுக்குள் முதலில் நட்பாகி பின்னர் காதல் மலர்ந்தது.
சுமார் 6 வருடங்கள் காதலித்த இவர்கள், 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் குஷ்பூ சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
சுந்தர்.சி, தற்போது கமர்ஷியல் படங்கள் கொடுப்பதில் கிங் ஆக வலம் வருகிறார். குஷ்பூவும் சில வருடங்களுக்கு முன்பு திரையுலகிற்குள் கம்-பேக் கொடுத்தார்.
குஷ்பூ-சுந்தர்.சி தம்பதிக்கு அவந்திகா, ஆனந்திதா என இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். சுந்தர்.சி குடும்பம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளனர்.
குஷ்பூ, இன்று தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். தனது கணவருடன் சிரித்து பேசி வெட்கப்படுவது போல அந்த போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
கூடவே, ‘இத்தனை வருடங்களுக்கு பிறகும் முதல் முறை போலவே என்னை வெட்கப்பட வைக்கிறார்’ என கேப்ஷனில் பதிவிட்டிருக்கிறார். இந்த க்யூட் கப்புளின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.