சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
சாதுர்மாஸ்ய காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது. இந்த காலத்தில் முடிந்தவர்கள், கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். ஜூலை 17ம் தேதி முதல் சதுர்மாஸ்யம் தொடங்கி நவம்பர் 12 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுர்மாஸ்ய காலம் ஜூலை 17ம் தேதி பகவான் விஷ்ணு நான்கு மாதங்களுக்கு யோக நித்திரைக்கு செல்கிறார் என்பது ஐதீகம். சதுர்மாஸ்யத்தின் நான்கு மாதங்களில், ஆடி, ஆவணி, பிரட்டாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில், சூரியன் கடகம், சிம்மம், கன்னி மற்றும் துலாம் ராசிகளில் பெயர்ச்சியாவார். அதே சமயம் குரு பகவான் ரிஷபத்தில் நிலைத்திருப்பார்.
சதுர்மாஸ்யகாலத்தில் பகவான் விஷ்ணு நித்திரைக்கு சென்று விட்டுவதால், விஷ்ணுவின் வேலையையும் சேர்த்து பார்க்கும் சிவ பெருமான், சங்கர நாராயணராக வணங்கப்படுகிறார். இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் விஷ்ணு மட்டுமல்ல, பிற தெய்வங்களும் தேவர்களுக்கும் யோகநித்திரையில் சென்று விடுவதாக நம்பிக்கை.
சாதுர்மாஸ்ய காலத்தில் சிம்மத்தில் புதன், சுக்கிரன், சூரியன் இணைவதன் காரணமாக லக்ஷ்மி நாராயண யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் இந்த நான்கு மாதங்களில் உருவாவதால், சில ராசிகள் நற்பயனை அடைவார்கள். சதுர்மாஸ்ய காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பகவான் விஷ்ணு, அருள்பாலிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
கடக ராசிகளுக்கு சதுர்மாஸ்ய தொடக்கத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் சஞ்சரிப்பதால், வாழ்க்கையின் எல்லா வகையிலும் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். மேலும் நிதி நிலைமை வலுவாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் நீங்கி வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கும்.
சூரியபகவானின் ராசியான சிம்ம ராசிக்காரர்களுக்கு சதுர்மாஸ்ய காலம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் இருக்கும். அனைத்து விதமான கவலைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பதுடன் வருமானம் உயரும் வாய்ப்பும் உள்ளது. எனவே நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
சதுர்மாஸ்யத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் துலாம் ராசியில் சஞ்சரிப்பதுடன், பல கிரகங்களின் சேர்க்கையும் இருக்கும், இதன் காரணமாக துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும். பணப் பிரச்சனைகள் விலகும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சதுர்மாஸ்ய காலத்தில், கும்ப ராசிக்கு அதிபதியான சனிதேவர், இந்த ராசியில் நிலைத்திருப்பதால், சனியின் அருள் பரிபூரணமகா இருக்கும், முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். செல்வாக்கும் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.