Gate of Death: ஹிட்லர் நாஜி படையின் திகிலூட்டும் மரண வாயில்..!!!

நீங்கள் வரலாற்றில், ஹிட்லரை பற்றி நிச்சயம் படித்திருக்க கூடும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் தீவிர எதிரியாகவும் இருந்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின்போது, ​​போலந்தில் ஹிட்லரின் நாஜி இராணுவத்தால், அமைக்கப்பட்டட்ட சித்தரவதை முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உரிழந்தனர். இவர்களில், பெரும்பாலானோர் யூதர்கள்.

நீங்கள் வரலாற்றில், ஹிட்லரை பற்றி நிச்சயம் படித்திருக்க கூடும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் தீவிர எதிரியாகவும் இருந்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின்போது, ​​போலந்தில் ஹிட்லரின் நாஜி இராணுவத்தால், அமைக்கப்பட்டட்ட சித்தரவதை முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உரிழந்தனர். இவர்களில், பெரும்பாலானோர் யூதர்கள்.

1 /5

நாஜி சித்தரவதை முகாம் போலந்தில் உள்ளது, இது 'ஆஸ்ட்விஸ் முகாம்' என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்ட்விஸ் முகாமுக்கு வெளியே ஒரு பெரிய இரும்பு வாயில் உள்ளது, இது 'மரண வாயில்' (Gate of Death) என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான யூத மக்கள் ஆடு மாடுகள் போல்,  ரயில்களில் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இந்த நுழைவாயில் வழியாக சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்கள், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2 /5

'ஆஸ்ட்விஸ் முகாம்' (Auschwitz Camp) அத்தகைய ஒரு இடமாக இருந்தது, அங்கிருந்து தப்பிக்க முடியாத வகையில் அது கட்டப்பட்டது. யூதர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் முகாமுக்குள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதோடு கடுமையான வேலைகளை செய்ய வைக்கப்பட்டனர். இது தவிர, வயதான மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் முகாமுக்குள் இருந்த எரிவாயு அறையில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். இதுபோன்ற லட்சக்கணக்கான மக்கள் இந்த எரிவாயு அறைகளில் போட்டு கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

3 /5

ஆஸ்ட்விஸ் முகாமின் வளாகத்தில் ஒரு சுவர் உள்ளது, இது 'wall of death' அதாவது 'மரணத்தின் சுவர்' என்று அழைக்கப்படுகிறது. பனியின் மத்தியில் நிற்க வைக்கப்பட்டு மக்கள் அடிக்கடி சுடப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற ஆயிரக்கணக்கானவர்களை நாஜிக்கள் கொன்றனர்.

4 /5

1947 ஆம் ஆண்டில், போலந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தால் நாஜி வதை முகாம் அரசாங்க அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. சுமார் இரண்டு டன் தலைமுடி அருங்காட்சியகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஆடைகளை தைக்க, நாஜிக்கள் யூதர்கள் மற்றும் பிறரின் தலைமுடியை இறப்பதற்கு முன் வெட்டுவார்கள். 

5 /5

இது தவிர, இந்த அருங்காட்சியகத்தில் லட்சம் செருப்புகள் மற்றும் கைதிகளின் காலணிகளும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.