7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
7th Pay Commission:அகவிலைப்படி தற்போது 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும். டிஏ உயர்வின் நேரடிப் பலன் ஊழியர்களின் சம்பளத்தில் தெரியும். இந்த ஊதிய ஏற்றம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நன்மைகளை அளிக்கும். இது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. அவர்களுக்கு கிடைத்துள்ள நல்ல செய்தி என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் மீண்டும் அதிகரிக்கவுள்ளன.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் அவர்களது டிஏ (DA) 4% அதிகரிக்கப்பட்டதை அடுத்து அவர்களது மொத்த அகவிலைபடியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 50% -ஐ எட்டின.
தற்போது ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்ற கேள்வி ஊழியர்களிடையே உள்ளது. இதற்கு சமீபத்தில் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வெளிவந்ததை அடுத்து அகவிலைப்படி இந்த முறை 3% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரலாம்.
அகவிலைப்படி 3% அதிகமானால் ஊழியர்களுக்கு சுமார் ரூ.1,00,170 வரை பலன் கிடைக்கலாம். எனினும், ஊழியர்களின் தர ஊதியம் மற்றும் சம்பள அமைப்பைப் பொறுத்து இந்த உயர்வு மாறுபடலாம். இதற்கான கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.31,500 என வைத்துக்கொள்வோம். அவரது தற்போதைய அகவிலைப்படி 50%, அகவிலைப்படித் தொகை மாதம் ரூ.15,750 ஆக இருக்கும். 6 மாதங்களுக்கு இது ரூ.94,500 ஆக இருக்கும். ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 53% ஆனால், அகவிலைப்படித் தொகை மாதத்திற்கு ரூ.16,695 ஆகிவிடும். 6 மாதங்களுக்கு இது ரூ.1,00,170 ஆக உயரும்.
7வது ஊதியக்குழுவின் கீழ் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. தொழிலாளர் பணியகம் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் இந்த திருத்தம் ஏற்படுகின்றது.
அகவிலைப்படி தற்போது 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும். டிஏ உயர்வின் நேரடிப் பலன் ஊழியர்களின் சம்பளத்தில் தெரியும். இந்த ஊதிய ஏற்றம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நன்மைகளை அளிக்கும். இது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.