இளம் வயதில், ஓடாக உழைத்து தேய்ந்தவர்கள், வயதான காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு நிலையான பென்ஷன் தேவை. உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே கவனித்து கொள்ள இது உதவியாக இருக்கும். எனவே நல்ல ஓய்வூதியத்தை கொடுக்கும் சிறந்த பென்ஷன் திட்டம் எது என்று கவனித்து அதில் சேமிக்க வேண்டும்.
NPS என்னும் தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் சேரலாம்.
தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டிற்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
உங்களது 30ஆவது வயதில் இந்த தேசிய சேமிப்புத் திட்டத்தில் (NPS) கணக்கு தொடங்கினால் உங்களது 60ஆவது வயதில் உங்களுக்கு செட்டில்மெண்ட் தொகையாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 6,000 ரூபாயை முதலீடு செய்தால், மாதம் ரூ.27,352 பென்சன் பெறலாம். நீங்கள் 30 ஆண்டுகளில் முதலீடு செய்யும் தொகை ரூ.21.60 லட்சம் என்ற நிலையில், உங்களுக்கு கையில் பென்ஷனும் கூடவே, முதிர்வு தொகையாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாயும் கிடைக்கும்.
குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று eதிர்பார்க்காமல், நிம்மதியாக வாழ்க்கையை கழிக்க, இன்றே பென்ஷன் திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.