Rs 125 coin: ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ரூ .125 நாணயத்தை வெளியிட்டார். ஸ்வாமி பிரபுபாதா 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று பொதுவாக அறியப்படும் இஸ்கான் (International Society for Krishna Consciousness - ISKCON) நிறுவனர் ஆவார்.
இஸ்கான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, "பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு ₹ 125 மதிப்பிலான சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்." என தகவல் வழங்கியது. (ஆதாரம்: ISKCON Twitter)
அபய் சரண் தேவாக செப்டம்பர் 1, 1896 அன்று கல்கத்தாவில் பிறந்த அவர், இளைஞராக அவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 1922 ஆம் ஆண்டில், முக்கிய அறிஞரும் ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ பக்திசித்தாந்த சரஸ்வதியுடனான சந்திப்பு, அபயின் வாழ்க்கையில் திருப்பமாக அமைந்தது. அபய் 1933 ஆம் ஆண்டில் ஸ்ரீ பக்திசித்தாந்தரின் சீடரானார். பின்னர், அபய், தனது குருவின் உத்தரவை ஏற்று, ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவாக, கிருஷணரின் போதனைகளை பரப்பும் சேவை செய்தார். (ஆதாரம்: iskcon.org)
1966ம் ஆண்டு ஜூலை மாதம், பக்திவேதாந்த சுவாமி "ஹரே கிருஷ்ண இயக்கம் என அறியப்படும் சர்வதேச அளவிலான இஸ்கான் அமைப்பை நிறுவினார் " உலகின் ஏற்றத்தாழ்வை களைந்து உண்மையான ஒற்றுமை மற்றும் அமைதிக்காக உழைக்க வேண்டும் "என்று அவர் கூறினார். அடுத்த 11 வருடங்களுக்கு, ஸ்ரீ பிரபுபாதா பகவான் கிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் சுற்றுப்பயணங்களில் 14 முறை உலகை சுற்றி வந்தார். அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. மக்களின் உதவியுடன் ஸ்ரீ பிரபுபாதா உலகம் முழுவதும் கோவில்கள், பதிப்பகம் மற்றும் கல்வி நிறுவனங்களை நிறுவினார். அவர் இப்போது உலகின் மிகப்பெரிய சைவ உணவு நிவாரண திட்டமான ஹரே கிருஷ்ணா ஃபுட் ஃபார் லைஃப் என்ற திட்டட்த்தை தொடங்கினார். (ஆதாரம்: iskcon.org)
இஸ்கானின் உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் பக்தி-யோகா பயிற்சிகளை மேற்கொள்வதோடு, கோவில்களிலும் வழிபடுகிறார்கள். அவர்கள், திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள், யோகா கருத்தரங்குகள் மற்றும் சமுதாய இலக்கியங்களை விநியோகிப்பதன் மூலம் பக்தி உணர்வை ஊக்குவிக்கிறார்கள். இஸ்கான் உறுப்பினர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இலவச உணவு விநியோகத் திட்டங்கள் மற்றும் பக்தி யோகாவை வாழ்க்கையில் பின்பற்றுதல் போன்றவற்றை ஊக்குவிக்கின்றனர். (ஆதாரம்: iskcon.org)
சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். "ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியும் கலந்து கொண்டார். (ஆதாரம்: நரேந்திர மோடி ட்விட்டர்)