Prince the Horse: இந்திய ராணுவ மரியாதையை பெற்ற 16 வயது குதிரை

சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் உள்ள பிரின்ஸ் என்ற 16 வயது குதிரைக்கு பொது-அதிகாரி-கமாண்டிங்-இன்-சீஃப் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை: சென்னை OTA வில் தொடர்ச்சியாக பதினொரு பாஸிங் அவுட் பரேட்களின் பங்கு கொண்ட ராணுவ குதிரையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் இந்த ராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது.

Also Read | ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகம்

1 /3

இந்திய ராணுவத்தின் செழுமையான மரபுகளின்படி OTA சென்னை கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் அவர்கள் இந்த விருதை புதன்கிழமையன்று குதிரைக்கு வழங்கினார்.  ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் பாஸிங்-அவுட்-பரேட்களில் பங்கேற்கும் குதிரைகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர் பிரின்ஸ். 

2 /3

இளமையான தோற்றம், பொறுமை மற்றும் அமைதியான நடத்தை காரணமாக, அணிவகுப்புக்கு பிரின்ஸ் எப்போதும் சிறந்த தேர்வாக இருந்ததாக அகாடமி தெரிவித்துள்ளது.

3 /3

ராணுவ அகாடமியில் பாஸிங் அவுட் அணிவகுப்பு என்பது ஒரு மாபெரும் நிகழ்வாகும், வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் என வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் பாஸிங் அவுட் பரேட் இது. 11 மாத குறுகிய சேவை கமிஷனுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 200 கேடட்கள் (நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட) அகாடமியில் இருந்து வெளியேறும் நிகழ்வு இது.