கிவி பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை முதல் பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி பழம்: கிவி பழம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தை தாராளமாக உட்கொள்ளலாம்.
கிவி பழம் மூட்டு வலியை குறைக்கிறது: கிவி பழங்களை உக்கொள்வதால், மூட்டு வலி மற்றும் எலும்பு வலி மறைந்துவிடும்.
கர்ப்பிணிப் பெண்களின் அற்புதமான நன்மைகள் தரும் கிவி பழம்: கர்ப்பிணிப் பெண்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் இரும்புச் சத்தும் ஃபோலிக் அமிலமும் அதிகம் கிடைக்கும்.
கிவி பழம் மன அழுத்தத்தைப் போக்கும்: கிவி பழம் சாப்பிடுவதால் மன அழுத்தமும் நீங்கும். இன்றைய பிஸியான வாழ்க்கையில், பெரும்பாலானோர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கும்.
வயிற்று வலியையும் கிவி பழம் போக்கும்: கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வயிற்று பிரச்சனைகளை தவிர்க்கலாம். வயிற்றில் வாயு பிரச்சனை இருந்தால் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்.