துரதிஷ்டத்தை கொண்டு வரும் ‘இவை’ பூஜை அறையில் இருக்கக் கூடாது!

வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்,  வைக்க கூடாத பொருட்கள் ஆகியவற்றை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. எந்த திசையில் எதை வைத்தால் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

பூஜை அறையில் வைக்கப்படும் சில விஷயங்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும். எனவே உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், இன்றே அகற்றவும்.

1 /5

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உக்ரமான தெய்வங்களின் சிலைகளை  வீட்டில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் வீட்டில் துர்பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

2 /5

பூஜை அறையில் பொதுவாக கடவுள் ஸ்லோக புத்தங்கள், புராண கதைகள் அடங்கிய புத்தகங்கள் வைத்திருப்போம். ஆனால், கிழிந்த புத்தகங்கள் இருக்கக்கூடாது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அப்படிப்பட்ட புத்தகம் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருந்தால் உடனே அதை முழுமையாக அகற்றி தண்ணீரில் கரைக்கவும்.

3 /5

இந்து மதத்தில் அட்சதைக்கும் பூஜையில் முக்கியத்துவம் உண்டு. ஆனால் உடைத்த அரிசி கொண்டு செய்யப்பட்ட அட்சதையை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது. 

4 /5

இந்து மதத்தில், பித்ருக்களாக போற்றப்படும், நமது முன்னோர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. ஆனால் பூஜை அறையில்  அவர்களது  படங்களை வைத்தால் வீட்டில் அசுப பலன்கள் ஏற்படும்.

5 /5

தெய்வங்களின் உடைந்த சிலைகளை பூஜிப்பதால்,  பூஜித்த பலன் முழுமையாக கிடைக்காது. இவற்றை பூஜை அறையில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது.மேலும், எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்கிவிடும்.