வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!

Guru Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தின், சனியை போன்ற அதிக முக்கியத்துவம் பெற்ற கிரகம் குரு. கடந்த மே மாதம் 1ம் தேதி, மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், ரிஷபத்தில் வக்ர நிலையை அடைய உள்ளார். இதனால் சில ராசிகள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க போகிறார்கள்.

வாழ்க்கையில் சுப காரியங்கள் நிகழ காரணமாக இருப்பவர் குரு பகவான். சந்தோஷமான திருமண வாழ்க்கை, நல்ல வருமானம் அகியவற்றை கொடுப்பவரும் குருபகவான். எனவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, ஜாகத்தில் குருவின் நிலை வலுவாக இருக்க வேண்டும் 

1 /8

குரு பகவான்: ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் மிருகசிரீடம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதோடு, அக்டோபர் 9ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்வார். இந்த கால கட்டத்தில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.

2 /8

குரு பெயர்ச்சி: குரு பகவான், தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுகிறார். ரிஷபத்தில் மே 01, 2024 முதல், சஞ்சரித்து வரும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவார்.

3 /8

குரு வக்ர பெயர்ச்சி: அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியான வியாழன், அக்டோபர் 9, 2024 அன்று காலை ரிஷபத்தில் வக்ர நிலையை அடையும். 2025 பிப்ரவரி 4, வக்ர நிவர்த்தி அடையும். இதனால், சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.

4 /8

மிதுன ராசிகளுக்கு, வக்ர நிலையை அடையும் குருவினால், நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் எல்லா வகையிலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

5 /8

கடக ராசிகளுக்கு குருவின் வக்ர நிலை காரணமாக வேலையில் வெற்றிகள் உண்டாகும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

6 /8

7 /8

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் வக்ர பெயர்ச்சி, உதயம் மற்றும் அஸ்தமனம், கிரக பெயர்ச்சியினால் ஏற்படும் கிரக சேர்க்கைகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், தனிநபர்களுக்கு மட்டுமல்லாது நாடு மற்றும் உலகம் ஆகிய நிலைகளிலும் சுப மற்றும் அசுப தாக்கங்களை ஏற்படுத்தும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.