Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு, டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக்குழு ஆகியவற்றில் சாதகமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
Budget 2024: பட்ஜெட்டுக்கு முன்னதாக ஜேசிஎம் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா 6 கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இவற்றில் டிஏ அரியர் தொகை, 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 18 மாத டிஏ அரியர் தொகை, அரசு பணிகளில் காலியிடங்களை உடனடியாக நிரப்புவது ஆகியவை அடங்கும். இவை அனைத்திலும் சாதகமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் சில நாட்களில் பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. இந்த பட்ஜெட்டில் அவர்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் பல நல்ல செய்திகள் அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் பல துறைகளும் பல வித எதிர்பார்ப்புகளுக்காக காத்திருக்கின்றன. மத்திய அரசு ஊழிய்ரகளும், டிஏ உயர்வு, டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக்குழு ஆகியவற்றில் சாதகமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
ஊழியர் அமைப்புகள் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 6 கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் 18 மாத டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான கோரிக்கை ஆகியவை அடங்கும்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக 2020 ஜனவர் முதல் 2021 ஜூன் வரை, 18 மாதங்களுக்கு அகவிலைப்படி முடக்கப்பட்டது. இந்த தொகை நலிந்தோருக்கான நலப்பணிகளில் பயன்படுத்தப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது.
எனினும், 18 மாதங்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை அரசாங்கம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை. இதை வழங்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த முறை, கோரிக்கையுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடிக்கு ஊழியர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. ஜே.சி.எம் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா, நிலுவையில் உள்ள 18 மாத டி.ஏ நிலுவைத் தொகையை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஊழியர் அமைப்புகள் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளன. எனினும், இதை மதிப்பாய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, இது சாத்தியமில்லை என்றும், ஓபிஎஸ் -இல் உள்ள பயன்களை தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் கொண்டு வரவும் ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக வழங்க வழிவகை செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
ஊழியர்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை 8வது ஊதியக்குழுவை அமைப்பது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுகின்றது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு இப்போது வெளிவந்தால்தான், 2026 -இல் அது அமலுக்கு வர முடியும். ஊதியக்குழுவை அமல்படுத்த தேவையான நடவைக்கைகளை எடுக்க 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில் ஜூலை 2024-க்கான அகவிலைபப்டி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றிய அறிவிப்பும் வரும் என நம்பப்படுகின்றது. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் ஜூலை இறுதியில் வரும். அதன் அடிப்படையில் டிஏ ஹைக் தீர்மானிக்கப்படும்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக ஜேசிஎம் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா 6 கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இவற்றில் டிஏ அரியர் தொகை, 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 18 மாத டிஏ அரியர் தொகை, அரசு பணிகளில் காலியிடங்களை உடனடியாக நிரப்புவது ஆகியவை அடங்கும். இவை அனைத்திலும் சாதகமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.