ரிஷபத்தில் குரு வக்ரமானால் பாவம் மோசமான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்! இவர் வக்ர குரு!

Vakra Guru 2024 Bad Effects: தீபாவளிக்கு முன் குரு பகவான், ரிஷபத்தில் வக்ர கதியில் இயங்குவார். இந்த சஞ்சார மாற்றம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

ஆண்டிற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும் குருவின் பின்னோக்கிய சுழற்சியால் கஷ்டப்பட்டு நஷ்டப்படும் ராசிகள் இவை....

1 /8

ரிஷபத்தில் தற்போது சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான்  அக்டோபர் 9ம் தேதி முதல் பின்நோக்கி நகர்கிறார். இந்த காலகட்டத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், துரதிருஷ்டமாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2 /8

12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சியடைகிறார். இது சில ராசிகளுக்கு மிகவும் மோசமான காலமாக இருக்கும்

3 /8

கன்னி ராசிக்கு குருவின் பெயர்ச்சியால் ஏற்பட்ட நன்மைகள், தற்போது எதிராக மாறும். நண்பர்களும் பகைவராகும் நேரம் இது என்பதால் கவனமாக இருக்கவும்

4 /8

சனியின் பெயர்ச்சியால் ஏற்கனவே வாடி வதங்கியிருக்கும் தனுசுவுக்கு வக்ர குருவும் பாதகத்தையே செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்

5 /8

மீன ராசியினருக்கு குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும் காலம் இது. இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை சுபசெலவாக மாற்றினால் மனதில் பாரம் இருக்காது

6 /8

குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களையே அனுபவித்து வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரகதி இயக்கம் சற்று மோசமானதாகவே இருக்கும். மனக்கவலைகள் அதிகரிக்கும்

7 /8

ரிஷபத்தில் வக்ர கதியில் இயங்கும் குருவின் தாக்கம் மிதுன ராசியினருக்கு பாதகமாகவே இருக்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது