டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள ARM படம் மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
"என்னு நிண்டே மொய்தீன்", "சார்லி", "கப்பி", "மின்னல் முரளி", "2018" போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும் புகழ் பெற்ற நடிகராக டோவினோ தாமஸ் உள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் திறமையான நடிகர்கள் பலர் உள்ளனர். எனவே, பாலிவுட்டில் நுழைய எனக்கு விருப்பம் இல்லை என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
நான் சினிமாவில் சிறிய கதாபாத்திரம் தொடங்கி, துணை வேடம், நகைச்சுவை நடிகர், வில்லன் போன்ற பாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “லால் சிங் சத்தா” படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், மற்ற படங்களில் கமிட் ஆனதால் நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நான் மலையாள படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜப்பானி போன்ற மொழிகளில் வெளியாகும் படங்களையும் பார்ப்பேன் என்று டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடித்துள்ள ARM படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகிறது.