இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கு திருமணம் நடந்ததை சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கொடுத்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இந்த நிலையில், தனக்கு நடந்து உள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதோடு திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவர் திருமணம் செய்து கொண்ட ஹிமானி என்ற பெண் யார் என்பதை இத்தொகுப்பில் பார்ப்போம்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.
இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்று தந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார்.
நீரஜ் சோப்ரா ஹிமானி மோர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் ஹரியானா மாநிலம் சோனிப்பட்டை சேர்ந்தவர்.
நீரஜ் சோப்ரா போலவே ஹிமானி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
அவர் டென்னிஸ் வீராங்கனை ஆவார். தற்போது விளையாட்டு மேலாண்மை படிப்பை அமெரிக்காவில் படித்து வருகிறார்.
தேசிய அளவில் பல டென்னிஸ் போட்டிகளை ஆடியுள்ள ஹிமானி இந்திய டென்னிஸ் தரவரிசையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 42வது இடத்திலும் இரட்டையர் பிரிவில் 27வது இடத்திலும் உள்ளார்.
விளையாட்டில் பல சாதனைகள் கொண்ட இருவர் திருமண வாழ்வில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.