ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயரில் இப்படியும் ஒரு ரெக்கார்டு..! இந்தியாவில் விளையாடிய சாதனை

இந்தியாவில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

 

1 /6

இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் விளையாடுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.  

2 /6

அவர் இப்போட்டியில் விளையாடியதன் மூலம் ஒரு வித்தியாசமான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது, இந்தியாவில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வயது 41 வயது 187 நாட்கள் ஆகிறது.  

3 /6

இந்தப் பட்டியலில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லாலா அமர்நாத் முதல் இடத்தில் இருந்தார். 1952 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அந்த அணியில் லாலா அமர்நாத்  விளையாடினார். அப்போது அவருக்கு வயது 41 ஆண்டு 91 நாட்கள்.     

4 /6

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ரே லிண்ட்வால். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர். அவர், 1960 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டி விளையாடியபோது அந்த அணியில் இருந்தவர். அப்போது அவருக்கு வயது 38 ஆண்டுகள் 112 நாட்கள்.  

5 /6

நான்காவது இடத்தில் இருப்பவர் ஷூட் பானர்ஜி. இந்திய கிரிக்கெட் அணி வீரர். 1949 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, அணியில் இருந்தவர். அவருக்கு அப்போது வயது 37 ஆண்டுகள், 124 நாட்கள்.   

6 /6

இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவரும் இந்திய கிரிக்கெட் வீரரே. அவது பெயர் குலாம் கார்டு. இந்திய அணி பிளேயரான அவர், 1960 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 34 ஆண்டுகள், 20 நாட்கள்.