Gold Rate Today: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் சில மாற்றங்களை கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களை சற்று பொறுமையிழக்கச் செய்துள்ள போதிலும் விலை அதிகமான மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களின் முதல் முதலீட்டுத் தேர்வாக தங்கம் இருக்கிறது.
பாதுகாப்பான முதலீட்டு கருவியாக கருதப்படும் தங்கத்தின் விலையை உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் நிர்ணயிப்பதால், அவ்வப்போது தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.
சுபமுகூர்த்தம், நல்ல நாள், கல்யாணங்கள் என வரிசையாய் பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் இருப்பதால், தங்க விலை உயர்கிறது.
பாதுகாப்பான முதலீட்டு கருவியாகவும் கருதப்படுவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. மக்கள் 24 காரட் தங்கத்திலும் முதலீடு செய்கின்றனர்
ஆபரணத் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு இந்தியாவில் மிகவும் பிரபலமானது. அதனால் தான் பண்டிகை, திருமணம் என சுப நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்கிறதி
இன்றைய நிலவரப்படி இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை 24 காரட் 10 கிராம் ₹ 64250 ஆகவும், 22 காரட் ₹ 58900 ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.47,120க்கு விற்பனையாகிறது
பிற முக்கியமான நகரங்களில் தங்கத்தின் விலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ₹ 5,845 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ₹ 6,375 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே தங்கம் வாங்குபவர்கள், நேரடியாக விலையை சரி பார்த்துக் கொள்ளவும். ஜீ மீடியா பொறுப்பேற்காது