பிரச்சனையை முடித்த இஷான் கிஷன்! மீண்டும் அணியில் தேர்வாக உள்ளார்!

சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

 

1 /6

விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் 2023ம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் அணியில் இடம் பெற கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.  

2 /6

கடந்த மாதம் புச்சி பாபு தொடரில் சதம் மற்றும் துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடியதால் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.  

3 /6

கடைசியாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற இஷான், அந்த தொடரில் இருந்து விலகினார். பின்னர் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.  

4 /6

அக்டோபர் 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் டி20 தொடரில் ரிஷப் பந்திற்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் இடம் பெறலாம்.  

5 /6

இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்த மாதம் நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிக்க நல்ல வாய்ப்பாக அமையும்.  

6 /6

ஒருவேளை துருவ் ஜூரெலை பிசிசிஐ அணியில் தேர்வு செய்தால், வங்காளதேச டி20 தொடரில் இடம் பெற சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனுக்கு இடையே போட்டி இருக்கும்.

Next Gallery