வாழைப்பழம் மற்றும் பால் ஆகியவை சாதாரண நாட்களிலும், வழிபாடு மற்றும் விரதத்தின் போதும் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் இரண்டு உணவு பொருட்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வாழைப்பழம் மற்றும் பால் இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவற்றைச் சாப்பிடுவதால் உடல் வலுப்பெறும் என்பதில் மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இவை எல்லோருக்கும் நன்மை பயக்கும் என கூற இயலாது.
பாலும் வாழைப்பழமும் மிகவும் விரும்பப்படும் உணவு. அதிலும் விரதம், பூஜை போன்ற காலங்களுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவு என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், பாலையும் வாழைப்பழைத்தையும் சேர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் தவறுதலாக கூட வாழைப்பழத்தையும் பாலையும் கலந்து சாப்பிடக்கூடாது. வயிற்றில் கடுமையான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா நோயாளிகள் வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இது இருமல் பிரச்சனையை அதிகரிக்கும்.
சைனஸ் நோயாளிகள் தவறுதலாக கூட வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உடலில் ஒவ்வாமை மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படும். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதை ஒன்றாக சாப்பிடவே கூடாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.