NEPAL: நேபாளத்தை சுத்திப் பார்க்க போலாமா? பேக்கேஜ் விலையும் குறைவு வசதிகளும் அதிகம்!

IRCTC NEPAL TOUR : சுற்றுலாவுக்கு உகந்த இடம் இமயமலையில் அமைந்துள்ள நேபாளம். இந்தியாவின் அண்டை நாடு, உலகின் மிக உயரமான பத்து சிகரங்களில் எட்டு சிகரங்களைக் கொண்ட நாடு! இயற்கை எழில் கொஞ்சும் நேபாளத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ள நேபாளம் கௌதம புத்தருக்கு முக்கியமான இடம். மலையேற்றம் மற்றும் சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா என உலகை தன்னை நோக்கி ஈர்க்கும் நாடு நேபாளம்...  

1 /8

IRCTC டூர் பேக்கேஜுடன் நேபாளத்திற்குச் செல்லுங்கள், கட்டணம் முதல் தங்குமிடம் வரை அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். மும்பையில் இருந்து தொடங்கும் இந்த பேக்கேஜ், காத்மண்டுவுக்கு அழைத்துச் செல்லும். மொத்தம் 6 நாள், 5 இரவுகள் கொண்ட சுற்றுலாப் பயணம் இது. 

2 /8

விமானம் மூலம் காத்மாண்டுக்கு சென்று அங்கு பயணிகள் நான்கு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள். மார்ச் நான்காம் தேதியன்று இந்தப் பயணம் தொடங்குகிறது

3 /8

சுற்றுலாப் பயணத்திற்கான கட்டணம், அறையில் தங்குவது தொடர்பான உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமையும். தனியாக, இருவராக அல்லது மூவராக என தங்கும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். காத்மாண்டுவில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்

4 /8

சுற்றுலாப் பயணிகள், பயணத்தின் இரண்டாவது நாள் போகராவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு மனோகம்னா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்

5 /8

மூன்றாம் நாள் சூரிய உதயத்தைக் காண சரங்கோட் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதிகாலையில் இமயமலையில் உதிக்கும் ஆதித்யனின், உதயத்தை கண்டு களித்ததும், சுற்றுலாப் பயணிகள் விந்தியவாசினி கோயில், படலே சாங்கோ, குப்தேஷ்வர் மகாதேவ் குகை ஆகியவற்றைப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவார்கள்.

6 /8

நான்காம் நாள், போகாராவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்

7 /8

ஐந்தாம் நாளன்று சுற்றுலாப் பயணிகள் பசுபதிநாத் கோயில், பௌதநாத் ஸ்தூபி, தர்பார் சதுக்கம், திபெத்திய அகதிகள் மையம், சுயம்புநாத் ஸ்தூபிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

8 /8

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் முன்பதிவு  செய்யப்படும். இதற்கு மும்பை ஐஆர்சிடிசி பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.