சிவராத்திரிக்கு ஆன்மீக பயணம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ் அறிமுகம்

IRCTC Tour Package : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது இந்தியன் ரயில்வே சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் கட்டாயம் மூத்த குடிமக்களை குஷி படுத்தும். இதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

தென்னிந்தியாவில் இருக்கும் சிவன் ஆலயத்தை பார்வையிட விரும்பினால், ஐஆர்சிடிசி தற்போது உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜெய் அறிமுகம் செய்துள்ளது. இந்த பயணத்தில் நீங்கள் தென்னிந்தியாவில் இருக்கும் சில பிரபலமான கோவில்களை தரிசிக்க முடியும்.

1 /5

சிவராத்திரி டூர் பேக்கேஜ்: சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டுமானால் ஐஆர்சிடிசி அற்புதமான டூர் பேக்கேஜெய் அறிமுகம் செய்துள்ளது. இதில் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க முடியும். எவ்வளவு செலவாகும் என்று பார்ப்போம்.  

2 /5

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: சிவ பக்தர்களுக்காக ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பெயர் தென்னிந்தியா- மகாசிவராத்திரி ஸ்பெஷல் (WMA47A) ஆகும். இந்த டூர் பேக்கேஜ் மார்ச் 7 ஆம்பித்து மார்ச் 12 நிறைவடையும்.

3 /5

விமானம் மூலம் பயணம்: மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் பயணிக்கலாம். இங்குள்ள புனித ஸ்தலங்களுக்கு செல்லலாம். மும்பையில் இருந்து விமானம் மூலம் இந்த பயணம் இருக்கும். மேலும் இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் வசதிகள், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.  

4 /5

கட்டணம் விவரம்: ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில் தனியாகப் பயணம் செய்தால் 51,100 ரூபாயும், தம்பதியாக பயணம் செய்தால் ஒரு நபருக்கு 39,600 ரூபாயும், மூன்று பேருக்கு தலா 38,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் படுக்கையுடன் ரூ 33600 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ 29300 கட்டணம் வசூலிக்கப்படும்.   

5 /5

ஐஆர்சிடிசி இணையதளம்: இந்த டூர் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான "https://www.irctctourism.com/" ஐ பார்வையிடவும். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.