சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்தால், உங்கள் பணத்தை சில மணிநேரங்களில் இரட்டிப்பாக்கக்கூடிய இடமாக ஐபிஓ (IPO) சந்தை உள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில், Sona BLW Precision Forgings (Sona Comstar) என்னும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 20 சதவிகிதம் அதிகரித்தது. இதை விட ஒரே நாளில் 100 சதவிகிதம் வருமானம் கிடைத்த நிறுவனங்களும் உண்டு.
இண்டிகோ பெயின்ட்ஸ் 2021 பிப்ரவரி 2 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதன் பங்குகள் ₹1490 வெளியீடப்பட்ட நிலையில் முதல் நாளில் ₹3119 என்ற அளவில் முடிந்தது. அதாவது, ஒரே நாளில், முதலீட்டாளர்களுக்கு இங்கு 109% வருமானம் கிடைத்தது.
MTAR டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் மார்ச் 15, 2021 இல் பட்டியலிடப்பட்டது.₹ 575 என்ற வெளியீட்டு விலையில் தொடங்கிய இதன் வர்த்தகம் முதல் நாளில் 1082 ரூபாயில் முடிவடைந்தது. அதாவது, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 88% வருமானம் கிடைத்தது.
நுரேகா லிமிடெட் பங்குகள் 25 பிப்ரவரி 2021 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஐபிஓ வெளியீட்டு விலை ₹400 ஆக இருந்தது, அது முதல் நாளில் ரூ .667 என்ற அளவில் முடிவடைந்தது. இந்த பங்கு 1 நாளில் 67% வருமானத்தை அளித்தது.
நசாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்குகள் மார்ச் 30, 2021 இல் பட்டியலிடப்பட்டது. ₹1101 வெளியீட்டு விலையில் தொடங்கிய இதன் வர்த்தகம்முதல் நாளில் ரூ $1576.8 ஆக முடிவடைந்தது. அதாவது, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 43% வருமானம் கிடைத்தது.
ரெயில்டெல் 26 பிப்ரவரி 2021 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஐபிஓவுக்கான வெளியீட்டு விலை ரூ .94 ஆக இருந்தது, இதன் பங்குகள் முதல் நாளில் 29% அதிகரித்து ரூ .121 ஆக முடிவடைந்தது.