IPL Points Table 2024: முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை அணி!

IPL Points Table 2024: மும்பை அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஐபிஎல் 2024 தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

1 /5

திங்கட்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

2 /5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி. தற்போது 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் விகிதம் 1.249 உடன் முதல் இடத்தில் உள்ளனர்.  

3 /5

இரண்டாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று தற்போது 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் விகிதம் 1.047 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

4 /5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு முதல் இடத்தில் இருந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்த பின்பு தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை தற்போது 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் விகிதம் 0.976 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.  

5 /5

அடுத்த இடங்களில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் உள்ளன.