IPL Auction 2024: ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, இந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்க எத்தனை வீரர்களை வாங்க, எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்பதை இதில் காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் முழுமையான அணியை கட்டமைக்க நிர்வாகம் வைத்திருக்கும் வியூகங்கள் ஆகியவை குறித்து இதில் பார்க்கலாம்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், வினோத், ஹர்திக் பாண்டியா, ஆகாஷ் மத்வால், அர்ஜுன் டெண்டுல்கர், டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேய சிங், என். திலக் வர்மா, நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷம்ஸ் முலானி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ரித்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்
அணியின் தேவை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த மினி ஏலத்தில் 8 காலி இடங்கள் உள்ளன, இதில் நான்கு வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார்கள்.
மீதமுள்ள பர்ஸ் தொகை: மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அதன் ரூ.100 கோடி பர்ஸ் தொகையில் வீரர்களுக்கு தற்போது வரை ரூ. 82.25 கோடியை செலவிட்டுள்ளது. எனவே இந்த மினி ஏலத்தில் ரூ.17.75 கோடியுடன் மும்பை இந்தியன்ஸ் செல்கிறது.
வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள்: டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர் என ஐந்து வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை மும்பை விடுவித்துள்ளது. மேலும், கிரீனை பெங்களூருவுக்கு மாற்றிவிட்டது. குஜராத் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவையும் பெற்றது. எனவே, ஓரிரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சார்களை மும்பை எடுக்க வாய்ப்புள்ளது.
சுழற்பந்துவீச்சு: இதில் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா ஆகியோர்தான் உள்ளனர். எனவே, தரமான சுழற்பந்துவீச்சாளர்களை நோக்கியும் மும்பை இந்தியன்ஸ் இந்த ஏலத்தில் செயல்படும்.
அதிலும் ஜெரால்டு கோட்ஸி, ஹெண்ட்ரிக்ஸ், வஹிந்து ஹசரங்கா, முஜீப்-உர்-ரஹ்மான், ஜார்ஜ் லிண்டே ஆகியோரை ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் முயற்சிக்கும்.