Gawasaki W 175: ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் தள்ளுபடி... விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?

Gawasaki W 175: கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கவாஸாகி டபிள்யூ175 மாடலின் இஞ்சின். விலை விவரம் மற்ற வசதிகள் ஆகியவற்றை இதில் காணலாம். மேலும், இதில் கிடைக்கும் விலை குறைப்பையும் காணலாம். 

  • Dec 15, 2023, 16:27 PM IST
1 /7

கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் இந்தியா பைக் வீக் 2023 நிகழ்வில் கவாஸாகி டபிள்யூ175 மாடலை (Gawasaki W 175) அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த பைக்கின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

2 /7

இந்த பைக்கின் விலை ரூ.25 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பைக்கின் Ebony வண்ண மாடலை ரூ.1.35 லட்சத்திற்கு பதிலாக ரூ.1.22 லட்சத்திற்கு வாங்கலாம். அதே நேரத்தில், அதன் பெர்சிமன் ரெட் ஷேட் கலர் மாடல் ரூ.1.24 லட்சத்திற்கும், மெட்டாலிக் ஓஷன் ப்ளூ கலர் வேரியன்ட் ரூ.1.31 லட்சத்திற்கும், மெட்டாலிக் கிராஃபைட் கிரே கலர் மாடல் ரூ.1.29 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

3 /7

4 /7

இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. கச்சிதமான பிரேக்கிங்கிற்காக, பைக்கின் முன்புறத்தில் 245மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது இரட்டை சேனல் ஏபிஎஸ்ஸையும் கொண்டுள்ளது. அதன் பின்புறத்தில் இரட்டை Shock Abosrbers உள்ளன.  

5 /7

கவாஸாகி டபிள்யூ175 பைக் 177சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 12.7 hp பவர் மற்றும் 13.2 Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது.  

6 /7

இறுதியாக, கவாஸாகி சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் Ninja ZX-10RR மாடலின் குளிர்கால சோதனை பதிப்பை அறிமுகப்படுத்தியது. கருப்பு, சாம்பல் மற்றும் நியான் மஞ்சள் நிற கிராபிக்ஸ் இந்த பைக்கில் காணப்படுகிறது. அதில் ஸ்னோஃப்ளேக் லோகோ உள்ளது.  

7 /7

Ninja ZX-10RR பைக்கில் 998சிசி நான்கு-ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு மற்றும் 4-இன்-லைன் எஞ்சின் உள்ளது, இது 197 bhp ஆற்றலையும் 113.5 Nm டார்க்கையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் உச்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர் ஆகும்.