Investment Tips: விரைவாக கோடீஸ்வரர் ஆக இந்த 5 விஷயங்களில் முதலீடு செய்யுங்கள்

அதிக வருமானம் தரும் திட்டங்கள்: வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த நேரத்தில் சிறந்த வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். அதன்படி சில முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், அவை உங்களுக்கு கட்டாயம் பலன் தரும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

1 /6

100 க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி திட்டங்கள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டால் நடத்தப்படுகின்றன. இது நாட்டின் மிகப்பெரிய பரஸ்பர நிதி நிறுவனமாகும். பரஸ்பர நிதிகள் மூலம், பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்யாமல், கடன், தங்கம் மற்றும் கமாடிட்டிகளிலும் முதலீடு செய்யலாம்.

2 /6

நீங்கள் ஐந்து வருடங்கள், 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு பல பரஸ்பர நிதிகள் உள்ளன. குறுகிய காலத்திற்கு கடன் நிதிகள் அல்லது திரவ நிதிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு சிறந்த தேர்வாகும்.

3 /6

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாகும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாளராக இருந்தால், சம்பளத்தில் ஒரு பகுதியை இ.பி.எஃப்.ஓ​​க்கு அளித்திருக்க வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை, அதே பங்களிப்பும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இ.பி.எஃப்.ஓ தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி கிடைக்கும்.

4 /6

தங்கம் முதலீட்டிற்கு மிகவும் நம்பகமான விருப்பமாகும். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பேப்பர் கோல்டு, கோல்டு ETF, சவரன் கோல்ட் பாண்ட், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டிஜிட்டல் கோல்டு ஆகியவை சிறந்த தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தங்கத்தை முதலீடு செய்வது மற்றும் விற்பனை செய்வது எளிதாகும்.

5 /6

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டமும் சிறந்த முதலீட்டுத் தேர்வாகும். பாதுகாப்பான முதலீட்டுடன் கூடிய இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள். இதன் மீதான வருமானத்திற்கான உத்தரவாதத்துடன், உங்கள் பணம் நிலையான வட்டியுடன் வளரும். இதில் ரூ.1500 முதல் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

6 /6

பிபிஎஃப் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக, அருகிலுள்ள வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கலாம். இது 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்தக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.