SIP மூலம் லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட Tips & Tricks! மாசம் ஆயிரம் ரூபாய் போதும் ஜென்டில்மேன்!

Power of SIP : SIP மூலம் அதிக லாபம் ஈட்ட விரும்பும் பலருக்கு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது எப்படி என்று தெரியவில்லை. அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்...

மாதந்தோறும் ரூ 1000 முதலீடு என்றும், தோராயமாக 4 லட்ச ரூபாய் என்றும் வைத்துக் கொண்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

1 /8

எந்த திட்டத்திலும் கிடைக்காத அளவு வருமானம் SIP மூலம் சாத்தியமாகும். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும் என்பதும், சராசரி வருமானம் 12 சதவீதம் என்றால் இதைவிட வேறு சிறந்த திட்டம் ஏதும் இருக்க முடியுமா?  

2 /8

SIP மூலம் தொடர்ந்து 35 வருடங்கள் 1000 ரூபாயை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் அது கணிசமான தொகையாக வளர்ந்துவிடும்

3 /8

35 ஆண்டுகளில் 12 சதவீத கூட்டு வட்டியை கணக்கிட்டால் அது சுமார் 60 லட்சம் ரூபாயாக இருக்கும். முதலீடு செய்த தொகை மற்றும் வட்டித் தொகையை சேர்த்து தோராயமாக 65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

4 /8

SIP மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது, இது சந்தை அபாயங்களுடன் தொடர்புடையது. இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளின் நிலைமையை வைத்துப் பார்த்தால், பரஸ்பர நிதிகள் நல்ல லாபம் கொடுக்கின்றன

5 /8

கடந்த ஆண்டுகளில் பரஸ்பர நிதியில் 15, 20 சதவீதம் கூட லாபம் கிடைத்துள்ளது எனப்தன் அடிப்படையில் 12 சதவிகிதம் என கணக்கிடலாம்.  

6 /8

சந்தை அபாயங்கள் இருந்தாலும் கூட, இந்த அளவு வருமானம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்காது என்பதால் தான், கடந்த சில ஆண்டுகளில் SIP முதலீடு கவனம் பெற்று வருகிறது  

7 /8

மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதிகள், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் நிதி இலக்குகளைத் திட்டமிடுவதற்கும், நிதானமாக செயல்படுவதற்கும் உதவுகிறது. முதலீடு செய்யும் போது பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் 12 சதவிகித லாபம் கிடைப்பது சாத்தியமானதே...

8 /8

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கும், கணக்கீடுகளுக்கும் ஜீ மீடியா பொறுப்பேற்காது