சர்வதேச பயணத்திற்கு திட்டமிடும்போது பண மதிப்பு என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பதை வெளிநாட்டு பயணங்களின்போது அடிக்கடி சிந்திக்க வேண்டியிருக்கும்.
தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வது, விசா அனுமதி வாங்குவது, ஷாப்பிங் செலவினங்களை பாதியாகக் குறைப்பது என பயண திட்டமிடலுக்கு காரணமான ரூபாயின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், அது பல நாடுகளின் கரன்சிகளை விட வலிமையாக இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு பயணம் செல்வது, விடுமுறையை கழிப்பது பட்ஜெட்டுக்குள் அடங்குவதாக இருக்கும்.
ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் மிகவும் காதல் நிறைந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 1 இந்திய ரூபாய் = 4.72 ஹங்கேரிய ஃபோரிண்ட்
தென் அமெரிக்காவில், பராகுவே அதன் செழுமையான குரானி கலாச்சாரம், கால்பந்து ஆர்வம் மற்றும் மலிவான தென் அமெரிக்க உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. 1 இந்திய ரூபாய்= 88.24 பராகுவே குரானி
1 இந்திய ரூபாய் = 185.82 இந்தோனேசிய ரூபாய்
உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமிய கலைநயத்தைக் கண்டு மகிழலாம், அழகான மசூதிகள், புதிய மசாலா பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுடன் சந்தைகள் உள்ளன. 1 இந்திய ரூபாய் = 141.88 உஸ்பெகிஸ்தானி சோம்
மங்கோலியா அமைதியான மடங்கள், பசுமையான தேசிய பூங்காக்கள், வெந்நீர் ஊற்றுகள், மணற்கல் பாறைகள் மற்றும் பனி வயல்களுடன் இயற்கை அழகு கொஞ்சும் நாடு. 1 இந்திய ரூபாய் = 40.32 மங்கோலியன் துக்ரிக்
கம்போடியாவில் தேசிய அருங்காட்சியகம், ராயல் பேலஸ், அழகான கடற்கரைகள், பிரமிக்க வைக்கும் தீவுகள், கோவில்கள், அடர்ந்த காடுகள் என பயணம் ரம்யமாக இருக்கும் 1 இந்திய ரூபாய் = 52.32 கம்போடிய ரியல்
வியட்நாம் மகத்தான இயற்கை அழகை பிஸியான நவீனத்துடன் இணைத்து வழங்குகிறது. பிரெஞ்சு காலனித்துவ கட்டிடங்கள், அழகான மிதக்கும் சந்தைகள், மற்றும் இராணுவ அருங்காட்சியகங்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வியட்நாமிற்கு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. (1 இந்திய ரூபாய் = 298.81 வியட்நாமிய டாங்)