ரயில்வேயில் சுவையான உணவை வழங்க ரயில்வே அமைச்சகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நாட்டின் 150 ரயில் நிலையங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI'ஈட் ரைட்' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ரயில் பயணிகளுக்கு தரமான உணவு வழங்கும் ரயில் நிலையங்களுக்கு FSSAI'ஈட் ரைட் ஸ்டேஷன்' சான்றிதழ் சான்றிதழ் ரயில்வேயால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 'ஈட் ரைட் ஸ்டேஷன்' என்னும் முயற்சி பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையம் ஒன்றிற்கு 'ஈட் ரைட் ஸ்டேஷன்' சான்றிதழை வழங்குவதற்கு முன், உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு சப்ளை செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தினால் தணிக்கை செய்யப்படுவார்கள்.
ரயில் நிலையங்களில், ஆரோக்கியமான தூய்மையான உணவு தயாரிப்பு மற்றும் உணவுத் தரங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றவும், சுவையான உணவைத் தயாரிப்பதையும் இது உறுதி செய்கின்றன.
சுமார் 150 இந்திய ரயில் நிலையங்களுக்கு இந்தச் சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. புது தில்லி, சென்னை, வாரணாசி, கொல்கத்தா, உஜ்ஜைன், அயோத்தி கான்ட், ஹைதராபாத், சண்டிகர், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், வதோதரா, மைசூர் சிட்டி, போபால், இகத்புரி மற்றும் கவுகாத்தி போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் இதில் அடங்கும்.
ரயில் நிலையங்கள் மட்டுமின்றி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் இந்தச் சான்றிதழை ரயில்வே வழங்கி வருகிறது. இதில் நொய்டா செக்டர் 51, எஸ்பிளனேட் (கொல்கத்தா), ஐஐடி கான்பூர், பொட்டானிக்கல் கார்டன் (நொய்டா) மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி ஆகியவை அடங்கும்.