அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி: உருக்கமாக சொன்ன அந்த வார்த்தைகள்..!

கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். 

 

1 /8

இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 2023-ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றார். டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார்.  

2 /8

விருதை பெற்றுக் கொண்ட பிறகு, பேசிய முகமது ஷமி, "கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இந்த விருது" என்று கூறினார். "என் பெற்றோர், குருமார், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த வெற்றிக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.  

3 /8

மேலும், "கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதும், வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்று முகமது ஷமி உறுதியாக கூறினார். "எந்த சூழலிலும் உங்களின் உழைப்பை கைவிடாதீர்கள்" என்று அவர் அறிவுறுத்தினார்.  

4 /8

ஒருவர் கடின உழைப்பை தொடர்ந்தால் அவருக்கு நிச்சயமாக பலன் உண்டு. உங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என இருக்கிறதோ அது நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்.  

5 /8

எந்த சூழலிலும் உங்களின் உழைப்பை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.   

6 /8

அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  

7 /8

முகமது சமி இப்போது கணுக்கால் காயம் காரணமாக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்.  

8 /8

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.