வேலை வியாபாரத்தில் வெற்றி: பலம் கூடும் வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Shani Vakra Peyarchi, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தில், சனி பகவான் வயது, போராட்டம், நோய், வலி, அறிவியல், தொழில்நுட்பம், இரும்பு, கனிம வளம், எண்ணெய், உழைப்பு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். 

சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி மிகவும் முக்கியமான கிரகம் ஆவார்.  அதனால்தான் சனியின் ஸ்தானத்தில் ஒரு சிறிய மாற்றம் கூட அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஜூன் 17, 2023 முதல், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். இன்று, அதாவது ஆகஸ்ட் 29 அன்று, சனி தனது வக்ர நிலையில் கூடுதல் பலத்துடன் இயங்க உள்ளார். இதனால் அற்புதமான பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

சனி பகவான்: மிக முக்கிய கிரகமான சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் அதிக காலத்திற்கு தங்கி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

2 /9

அதிக தாக்கம்: அனைத்து கிரகங்களிலும் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஆகையால் ராசிகளில் இவரது தாக்கமும் மற்ற கிரகங்களை விட அதிகமாக இருக்கும்.

3 /9

பலம் கூடியது: ஜூன் 17, 2023 முதல், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். இன்று, அதாவது ஆகஸ்ட் 29 அன்று, சனி தனது வக்ர நிலையில் கூடுதல் பலத்துடன் இயங்க உள்ளார். 

4 /9

ராசிகளில் தாக்கம்: சனியின் பலம் அதிகரிப்பதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் அதிகரிக்கும். எனினும், இந்த சக்திவாய்ந்த சனி 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை தரப்போகிறார். இந்த ராசிக்காரர்கள் சனியின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

5 /9

ரிஷபம்: சனியின் பலம் கூடியதால், அதன் தாக்கத்தில் காரணமாக ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும். இவர்களுக்கு அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் வேலையில் இருந்தாலும் சரி, வியாபாரத்தில் இருந்தாலும் சரி, வலுவான வெற்றியைப் பெறுவீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல நல்ல செய்திகள் கிடைக்கும்.   

6 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சனி பகவான் பல நன்மைகளைத் தருவார். உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் உறவுகள் சிறப்பாக இருக்கும். தந்தையின் உடல்நிலை மேம்படும், இதன் மூலம் உங்களுக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும். விரைவில் பெரிய வெற்றியைப் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும்.

7 /9

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைத் தரும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். முன்னேற்றப் பாதை மிக சிறப்பாக காணப்படுகின்றது. உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். படிப்படியாக முன்னேறுவீர்கள். 

8 /9

துலாம் ராசி: சக்தி வாய்ந்த சனி பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். சர்ச்சைக்குரிய விஷயத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். எந்த நோயிலிருந்தும் விடுபடலாம். வாழ்வில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.